யுபிஎஸ்சி தேர்வுகள் என்பது ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) நடத்தும் இந்திய அளவிலான அரசுப்பணிகளுக்கான தேர்வாகும். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்திய அளவில் பல துறைகளிடம் விண்ணப்பங்களை பெற்று எழுத்துத் தேர்வு மற்றும் நேரிடை தேர்வின் மூலம் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்கிறது. மேலும், இந்திய ஆட்சிப் பணி,இந்தியக் காவல் பணி , இந்திய வெளிநாட்டுப் பணி போன்ற பணிச்சேவைகளை ஒழுங்குபடுத்தி அப்பணியாளர்களின் பணிக்கால வாழ்வு, பயிற்சி மற்றும் சேவைவிதிகளை கட்டுப்படுத்தி வருகிறது.

 யுபிஎஸ்சி ஒவ்வொரு வருடமும் இந்தியக் குடிமைப் பணி தேர்வுகளின் மூலம் இந்திய ஆட்சிப் பணி போன்ற மிக முக்கிய அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்கிறது. இந்த தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது.    

நிலை 1 : முதல்நிலை அல்லது தகுதி தேர்வுகள் 

   இந்த தகுதி தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. தாள் ஒன்றில் பொது அறிவு, அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், அறிவியல், சுற்றுசூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிவை எழுத்து தேர்வின் மூலம் சோதிப்பர். 

தாள் இரண்டு - இயல் திறன் தேர்வு

 பத்தியை படித்து விடையளித்தல் மூலம் மொழியாற்றலும், கணிதம் சார்ந்த பல்வேறு கேள்விகள் கேட்கப்படும்.    
   இதில் ஒவ்வொரு தாளும் 200 மதிப்பெண்கள் கொண்டதாகும். தாள் ஒன்றிற்கு தேர்வாணையம் வெளியிடும் கட் ஆப் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். தாள் இரண்டில் குறைந்தது 35 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.