மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022-க்கு மறுப்பு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022 அடிப்படை ஆதாரமற்ற மற்றும் அறிவியல்பூர்வமற்ற முறையிலும், வெற்று யூகங்களின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய குறியீடு, மிகக்குறைந்த கரியமில வாயு உமிழ்வு தொடர்பான வரலாற்று தரவுகளை மறைத்துள்ளது. விவசாயிகள் அதிகம் உள்ள வளரும் நாடுகளுக்கு, மண் ஆரோக்கியம், வேளாண் பல்லுயிர், உணவு இழப்பு மற்றும் கழிவுகள் உள்ளிட்டவை முக்கியமானவை. இவை புதிதாக வெளியிடப்பட்டுள்ள, சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022 சேர்க்கப்படவில்லை.
மேற்கூறிய பல்வேறு காரணங்களால், சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022-க்கு, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
செய்தி மூலம்: PIB
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு (Environment Performance Index)
- EPI என அழைக்கப்படும் இந்த குறியீடானது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை உலக பொருளாதார மன்றம் (World Economic Forum), யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்கள் இணைந்து வெளியிடுவதாகும்.
- இந்த குறியீடு முதன்முதலில் 2002-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்பொழுது இது சுமார் 180 நாடுகளுக்கான செயல்திறன் குறியீட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு என்பது என்ன ?
- EPI அல்லது சுற்றுச்சூழல் செயல்துறை குறியீடு என்பது சுற்றுச்சூழல் நலம் மற்றும் நீடிப்புத்திறனை மையமாக கொண்டு வெளியிடப்படும் உலகளாவிய தரவரிசை பட்டியல் ஆகும்.
- 2022-ம் ஆண்டிற்கான EPI குறியீடு சுமார் 40 செயல்திறன் காட்டிகளை (Performance Indicator) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- 2022-ம் ஆண்டு தரவரிசை பட்டியலில் டென்மார்க் (Denmark) முதலிடம் பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து ஐக்கிய பேரரசு (United Kingdom) மற்றும் பின்லாந்து (Finland) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
- முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியா வெறும் 18.9 மதிப்பெண்கள் எடுத்து தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தை பெற்றுள்ளது.