அம்பை :

Ambai
அம்பை

 அம்பை எனப்படும் சி.எஸ்.லக்சுமி தமிழின் மிகமுக்கிய படைப்பாளிகளில் ஒருவர். பெண்ணிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. புனைவு எழுதுவது மட்டும் நில்லாது தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி போன்ற பல முன்னணி செய்தித்தாள்களில் கட்டுரைகளையும் எண்ணங்களையும் எழுதி வருகிறார்.  

சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நூல்கள் :

  • சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை (2021)

மற்ற முக்கிய நூல்கள் :

  • ஒரு கறுப்புச் சிலந்தியுடன்
  • வற்றும் ஏரியின் மீன்கள்
  • சொல்லாத கதைகள்
  • காட்டில் ஒரு மான்
  • வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை
  • அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
  • அந்தி மாலை 

ராஜம் கிருஷ்ணன் :




   தமிழின் மற்றுமொரு முக்கிய பெண்ணிய படைப்பாளி ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) ஆவார். இவர் நூல்கள் 2009ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன. முதன்முறையாக ஒருவர் உயிருடன் இருந்த போதே அரசுடமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே. தமிழில் கள ஆய்வு செய்யும் எழுத்தாளர் என பெயர் பெற்றார். விவசாயிகள், மீனவர்கள் என அன்றாட மக்களின் வாழ்க்கையை ஒட்டி இவரின் நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.  

நூல்கள் : 

  • வேருக்கு நீர்
  • குறிஞ்சி தேன் 
  • அலைவாய் கரையில்
  • கரிப்பு மணிகள்

  • காலம்தோறும் பெண்
  • காலம்தோறும் பெண்மை
  • யாதுமாகி நின்றாய்
  • இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

மீனா கந்தசாமி 

Meena Kandasamy
மீனா கந்தசாமி



மீனா கந்தசாமி ஒரு செயற்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவரின் படைப்பு பெண்ணியத்தையும் சாதி ஒழிப்பையும் மையப்படுத்தி இருக்கும். தமிழக குரலாக ஒலிக்கும் இவரின் நூல்கள் ஆங்கிலத்தில் படைக்கப்பட்டுள்ளது.

நூல்கள் :


  • தி ஜிப்சி காடஸ் (2014) - The Gypsy Goddess 
  • அய்யன்காளி (2008) - Ayyankaali

மொழிபெயர்ப்பு :

  • Talisman (தமிழில் எழுதியவர் : திருமாவளவன்)
  • Uproot Hindutva (தமிழில் எழுதியவர் : திருமாவளவன்)