இடுகைகள்

Thirukkural லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

40. கல்வி | Learning - TNPSC

  1.கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. பொருள் :   கற்கத்‌ தகுந்த நூல்களைக்‌ குற்றமறக்‌ கற்க வேண்டும்‌; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத்‌ தக்கவாறு நெறியில்‌ நிற்க வேண்டும்‌. 2.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. பொருள் :  எண்‌ என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக்‌ கலைகளையும்‌ வாழும்‌ மக்களுக்குக்‌ கண்கள்‌ என்று கூறுவர்‌. 3.கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். பொருள் :  கண்ணுடையவர்‌ என்று உயர்வாகக்‌ கூறப்படுகின்றவர்‌ கற்றவரே; கல்லாதவர்‌ முகத்தில்‌ இரண்டு புண்‌ உடையவர்‌ ஆவர்‌. 4.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். பொருள் :  மகிழும்படியாகக்‌ கூடிப்‌ பழகி. (இனி இவரை எப்போது காண்போம்‌ என்று) வருந்தி நினைக்கும்‌ படியாகப்‌ பிரிதல்‌ புலவரின்‌ தொழிலாகும்‌. 5.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். பொருள் :  செல்வர்முன்‌ வறியவர்‌ நிற்பதுபோல்‌ (கற்றவர்முன்‌) ஏங்கித்‌ தாழ்ந்து நின்றும்‌ கல்வி கற்றவரே உயர்ந்தவர்‌; கல்லாதவர்‌ இழிந்தவர்‌. ...

43. அறிவுடைமை | The Possession of Knowledge - TNPSC

1.அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். பொருள் : அறிவு, அழிவு வராமல்‌ காக்கும்‌ கருவியாகும்‌; அன்றியும்‌ பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும்‌ அழிக்க முடியாத உள்ளரணும்‌ ஆகும்‌. 2.சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. பொருள்:மனத்தைச்‌ சென்ற இடத்தில்‌ செல்லவிடாமல்‌, தீமையானதிலிருந்து நீக்கிக்‌ காத்து நன்மையானதில்‌ செல்லவிடுவதே அறிவாகும்‌. 3.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. பொருள்: எப்பொருளை யார்‌ யாரிடம்‌ கேட்டாலும்‌ (கேட்டவாறே கொள்ளாமல்‌) அப்பொருளின்‌ மெய்யான பொருளைக்‌ காண்பதே அறிவாகும்‌ 4.எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. பொருள்: தான்‌ சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப்‌ பதியுமாறு சொல்லித்‌, தான்‌ பிறரிடம்‌ கேட்பவற்றின்‌ நுட்பமான பொருளையும்‌ ஆராய்ந்து காண்பது அறிவாகும்‌. 5.உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. பொருள்: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும்‌ பின்னே வருந்திக்‌ குவிதலும்‌ இல்லாதது அறிவு. 6.எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு ...