20 மார்., 2022
in
Porul
யுபிஎஸ்சி,
Economics,
Mains,
TNPSC
2021-22-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்குப்பின்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். இவ்வருட ஆய்வறிக்கையின் மைய கருப்பொருளாக "விரைவான அணுகுமுறை" (Agile Approach) எடுத்துக்கொள்ளப்பட்டது.
 |
பொருளாதார ஆய்வறிக்கை |
பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன ?
இந்திய பொருளாதார ஆய்வறிக்கை என்பது ஆண்டிற்கொருமுறை நிதி அமைச்சகம் வெளியிடும் கோப்பாகும்.
இக்கோப்பு இந்தியாவின் பொருளாதாரத்தை பற்றியும் வளர்ச்சியை பற்றிய அதிகாரபூர்வ எண்களை கொண்டது மட்டுமில்லாமல் இந்திய பொருளாதாரத்தின் மீதான மூல தரவாக (Source data) பார்க்கப்படுகிறது.
இது பொருளாதார விவகாரங்கள் (Department of Economic affairs) துறையின் கீழ் செயல்படும் பொருளாதார பிரிவால் தலைமை பொருளாதார ஆலோசகரின் ஆலோசனையின் அடிப்படையில் தயாரிக்க படுகிறது.இந்தியாவின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை 1950-51-ம் ஆண்டில் பாராளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டது.
முக்கிய அம்சங்கள் :
வளர்ச்சி:
- 2021-22-ல் உறுதியான நிலையில் 9.2 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது (2020-21 ஆண்டு இதே கட்டத்தில் பொருளாதாரம் 7.3% சுருக்கத்தை (Contraction) எதிர்கொண்டது).
- 2022-23-ல் 8.0 - 8.5 சதவீத ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவின் வளர்ச்சி பற்றி வெளியிட்ட கணிப்புகளுடன் இது ஒத்துப்போகிறது.
அந்நிய செலாவணி :
- 2021 டிசம்பர் 31 அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு 633.6 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது.
- இது 2022-23-ம் ஆண்டில் உலக அளவில் நிகழவிருக்கும் பல்வேறு பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள உதவும்.
வேளாண்மை:
- 2021 – 22-ல் ஒட்டுமொத்த மதிப்புக் கூடுதல் 3.9 சதவீத வளர்ச்சி அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
- அடிப்படை ஆதாய விலை கொள்கை (Minimum Support Price Policy) பல்வேறு பயிர்களை விளைவிக்க ஊக்குவிக்கும் வகையில் அமையும். இது பாரம்பரியமான நெல், கோதுமை, கரும்பு போன்ற பயிர்களில் இருந்து பல்வகைபடுத்துதலை ஊக்குவிக்கும் (Crop Diversification).
- கால்நடை மற்றும் அதையொட்டிய துறை 2019-20 வரையான ஐந்தாடுகளில் 8.15% வளர்ச்சியை கண்டுள்ளது.
- உணவு பாதுகாப்பு வலையமைப்பை பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் (PMGKY) மூலம் இன்னும் பலருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.